Home /News /tamil-nadu /

சாலையில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்... சீனியர் மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்

சாலையில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்... சீனியர் மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

Coimbatore : கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், வேறு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் மணிகண்டன் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவர்களிடையே வியாழன் இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில்  சீனியர் மாணவர் ஓருவரை, அதே கல்லூரியில் படிக்கும் ஜுனியர் மாணவர்கள் அடித்து அரை நிர்வாணமாக்கினர். வியாழக்கிழமை இரவு நடந்த இந்த மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் குனியமுத்தூர் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை எனவும், பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் மணிகண்டன் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வரும் நிலையில் அவர்கள் சண்டையிட்டு இருக்கலாம் எனவும்  தெரிவித்தனர்.

Must Read : 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம்

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைபடத்தில், அரை நிர்வாணமாக வில்லனை ஆடைகளை கழற்றி அனுப்புவதை போல சீனியர் மாணவரை ஜூனியர் மாணவர்கள் அடித்து ஆடையில்லாமல் அரை நிர்வாணமாக விட்டு சென்று  இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, College student

அடுத்த செய்தி