• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிச்சை எடுப்பது போல தொழிற்சாலைக்குள் புகுந்து உலோகங்கள் திருடும் பெண்கள்

பிச்சை எடுப்பது போல தொழிற்சாலைக்குள் புகுந்து உலோகங்கள் திருடும் பெண்கள்

கோவை திருட்டு

கோவை திருட்டு

கோவையில் தொழிற்சாலைக்குள் புகுந்து உலோகங்களை திருடிய பெண்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

  • Share this:
    கோவையில் கை குழந்தைகளுடன்  பிச்சை எடுப்பது போல் நடித்து தொழிற்சாலைக்குள் புகுந்து அங்கு  இருக்கும் இரும்பு பொருட்களை  பெண்கள் சிலர்  திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை வைத்து போலீசார் அந்த பெண்களை தேடிவருகின்றனர்.

    கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் இயந்திர உதிரிபாகம் தயாரிக்கும் ஆலையை  நடத்தி வருபவர் அப்துல் ஹக்கீம். இவரது தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவருந்த சென்ற இடைவேளையில், தொழிற்சாலையின்  முன்பக்க ஷட்டர் திறந்திருந்தது.  அப்போது கைகுழந்தைகளுடன்  பிச்சை எடுப்பது போல வந்த 8 பெண்கள் ஆலைக்குள் யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்த பொருட்களை திருடினர்.

    தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டு இருந்த இரும்பு, பித்தளை கன் மெட்டல் போன்ற விலைமதிப்புள்ள உலோக பொருட்களை அவர்கள் கொண்டு வந்த துணிப்பையில் மறைத்து வைத்து திருடி சென்றுள்ளனர். பெண்கள் தொழிற்சாலைக்குள் வருவது, ஆலையில் இருக்கும் பொருட்களை திருடிச்செல்வது போன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    Also Read: சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    சிசிடிவி காட்சிகளுடன் இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஆலை உரிமையாளர் அப்துல் ஹக்கீம் புகார் அளித்த நிலையில் , இது குறித்து சரவணம்பட்டி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: