கோவையில் திறந்து இருக்கும் வீடுகளில் நுழைந்து பொருட்களை திருடி செல்லும் 4 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். வீடுகளில் நுழைந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
கோவையில் ஆட்கள் இருக்கும் போதே அதிகாலை நேரங்களில் வீடுகளுக்கு புகுந்து செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை ஒரு கும்பல் திருடிசென்றது. வெரைட்டி ஹால், செல்வபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இதனையடுத்து பொருட்களை திருடும் கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது.
வெரைட்டிஹால் அருகே ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் புகுந்து செல்போன்களை திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, சௌரியம்மாள் என்பதும் தங்கள் சகோதரர்கள் ரமேஷ், அந்து ஆகியோர் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிகாலை நேரங்களில் அசந்து தூங்கும் போது வீடுகளுக்குள் நுழையும் பெண்கள் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி சென்று தங்களது சகோதரர்கள் மூலம் விற்பனை செய்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கோவிலுக்கு கூல் ஊற்ற காணிக்கை வசூல் செய்வது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிங்க: குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை.. மனநல மருத்துவர் அளித்த சான்று
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் , எந்தெந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருடி இருக்கின்றனர், என்னென்ன பொருட்களை திருடி இருக்கின்றனர் என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்.. முகநூலில் மணப்பெண்ணின் படத்தை ஆபாசமாக பதிவிட்ட விசிக பிரமுகர் கைது!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Theft