ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வனவிலக்கு கணக்கெடுப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில், 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

  • Share this:
    கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில், 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைகால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    நான்கு வனசரங்களில் அமைக்கப்பட்டுள்ள 62 நேர்கோட்டுப் பாதையில் 130க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் பங்கேற்றுள்ளனர். இந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் முதல் மூன்று நாட்களுக்கு மாமிச உண்ணி மற்றும் தாவரம் உண்ணி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

    மேலும்.. கோவையில் எலைட் மதுபானக்கடைகளில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்!

    இதில் வனப்பகுதிக்குள் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு சென்று அங்குள்ள மாமிச உண்ணி, தாவரம் உண்ணி விலங்குகளையும் அதேபோல் வனவிலங்குகள் எச்சம், கீறல், கால்தடம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.

    இதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு 62 நேர்கோட்டுப் பாதையில் சென்று வனத்துறை ஊழியர்கள் வனவிலங்குகளுக்கு  தேவையான உணவு வகைகள், வாழ்விடங்கள் போன்றவற்றை கணக்கெடுக்கவுள்ளனர்.

    இன்று,பொள்ளாச்சி வனச்சரக உட்பட்ட நவமலை பகுதியில் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர் .அப்போது வனத்திற்குள் சிறுத்தையின் கால் தடம், மரங்களில் உள்ள கீறல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டது.  6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பின் பதிவுகளின் அறிக்கையை தலைமை வனப்பாதுகாவலர்க்கு அனுப்பப்படும் என்று வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    செய்தியாளர் சக்திவேல்
    Published by:Murugesh M
    First published: