Home /News /tamil-nadu /

கணவனுடன் சண்டை: கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மனைவி- கோவையில் பரபரப்பு

கணவனுடன் சண்டை: கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மனைவி- கோவையில் பரபரப்பு

கைது செய்யப்பட்ட பெண்

கைது செய்யப்பட்ட பெண்

பொள்ளாச்சி அருகே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் கணவனை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்‌.
இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வினோத் குமாரின் மனைவி வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வினோத் குமார், மனைவி மகாலட்சுமி மேல் சந்தேகம் அடைந்து, அடிக்கடி  தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதேபோல் நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு, மனைவியை வினோத்குமார் தாக்கியுள்ளார். அப்போது அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவி கணவனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

கணவனின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார்.

கோவையில் கட்டைப் பையில் கிடந்த பிறந்து சில தினங்களே ஆன குழந்தை- மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கிபாளையம்  காவல்நிலைய போலீசார் வினோத் குமாரின் மனைவி மகாலட்சுமியை விசாரணை மேற்கொண்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி