கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இதில். ஒரு வாக்காளரின் பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர் இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட கட்சி பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வகையில் கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 287 வாக்குச்சாவடி மையங்களில் 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆண்களும், 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 பெண்களும், 278 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வார்டு எண் பழைய எண் 22 புதிய எண் 69 ல் பூத் எண்842 , வரிசை எண் 633 புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயரும், அவர் தந்தை பெயரும் இந்தியில் வெளிவந்தது. பெயர்கள் இந்தியில் வந்ததால் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவை அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு.. போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் தெரிவித்தால் மட்டுமே, பதிவு செய்யும் போது பிழை ஏற்பட்டதா அல்லது வாக்காளர் பட்டியலில் பிழை ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவரும். வாக்காளர் வரைவு பட்டியலில் வாக்காளர் விபரங்கள் ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நியூஸ்18க்கு அளித்துள்ள தகவலில், ஆன்லைனில் விண்ணப்பித்ததால் இந்த தவறு நிகழ்ந்துள்ளது என முதற்கட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேரடியாக சேகரிப்பதில் தமிழில் தான் வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்.
மேலும் படிங்க: அரசு உயரதிகாரிகளின் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்: விஜயகாந்த்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Hindi, Voters ID