சிறுவனின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் கிராம மக்கள்!

பிருதிவிராஜ்

கோவை அருகே 13 வயது சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் கிராம மக்கள்

  • Share this:
கோவையில்  இருதய பாதிப்பு காரணமாக  உயிருக்கு போராடி வரும் 13 வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக கிராம மக்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம்  மதுக்கரையை அடுத்த குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜகுமார். இவரது  மகன் பிருதிவிராஜ்(13)  ஒன்பதாம் படித்து வருகிறார். பிருதிவிராஜுக்கு இருதயத்தில்  பாதிப்பு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிகிச்சைக்கு தேவையான  பணம் இல்லாததால் மருத்துவமனையில் வைத்து கவனிக்க முடியாமல் சிறூவனை வீட்டில் வைத்து பெற்றோர் கவனித்து வருகின்றனர்.  மாதத்தில் பெரும்பாலான  நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் சூழல் இருப்பதாகவும்,அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரே இதுவரை ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் செலவாகிவிட்ட நிலையில் , இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய 25 லட்சம்  செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதால் பணத்தை திரட்ட முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒன்றரை வயதில் பெரியார் முதல் ட்ரம்ப் வரை அடையாளம் காட்டும் குழந்தை!


இருதயத்தில் உள்ள இரு வால்வுகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் விஜயகுமார் தவிப்பதை உணர்ந்த குரும்பபாளையம் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை வழங்கியுள்ளனர்.

இந்த நிதி அறுவை சிகிச்சைக்கு போதுமானதாக  இல்லையென்பதால்  அந்த பகுதியை சேர்ந்த  இளைஞர்களும் பொது மக்களும் பல வகைகளில் நிதி திரட்ட முயற்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமும் உறவினர்கள்,  நண்பர்கள், சமூக நல அமைப்புகள் என பல தரப்பிலிருந்தும் நிதியை பெற  முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: என் ஆட்ட வெட்ட போறாங்க, காப்பாத்துங்க.. ஆட்சியரிடம் புகார் தெரிவித்த சிறுமி!

கிராம மக்கள்  சார்பில் இதுவரை ரூபாய் 5 லட்சம் நிதி பெறப்பட்டுள்ள நிலையில், தன்னார்வ  அமைப்புகள் சார்பில் தனியாக  5லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதில், ரூபாய் 8 லட்சம் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பணமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு தேவையான மீதமுள்ள தொகையை விரைவாக திரட்ட ஊர்மக்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்த  சிறுவனை காப்பாற்ற கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Published by:Murugesh M
First published: