வாகனங்களை திருடியதும் பார்ட் பார்டாக கழற்றி விற்பனை: இருவர் கைது!

வாகன திருட்டு

ஆரோக்கிய சகாய தர்மராஜ் வாகனங்களை திருடி  ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சேர்ந்த பழனிச்சாமி  என்பவர் உதவியுடன்  தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

  • Share this:
கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருடி அவற்றை தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் இருவரை பந்தயசாலை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் , 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்.  கடந்த சனிக்கிழமை  தனது மாருதி 800 காரில் கோவை  அரசு மருத்துவகல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வந்துள்ளார். உறவினரை பார்த்து விட்டு மீண்டும் காரை எடுக்க  பார்க்கிங் பகுதிக்கு வந்து பார்த்தபோது காரை   காணாமல் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பந்தய சாலை காவல்துறையினர் மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை புறநகர் பகுதியில்  கருமத்தம்பட்டி அருகே போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மாருதி 800 கார் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கார் ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆரோக்கிய சகாய தர்மராஜ் என்பதும், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து காரை திருடி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவ இடத்துக்கு  வந்த பந்தய சாலை போலீசார், ஆரோக்கிய சகாய தர்மராஜை கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,   ஆரோக்கிய சகாய தர்மராஜ் வாகனங்களை திருடி  ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சேர்ந்த பழனிச்சாமி  என்பவர் உதவியுடன்  தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பழனிச்சாமியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து  இரண்டு கார்கள் 2 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மற்றும் 2 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: வாழ்வளித்தது தமிழகம்தான்: ஓய்வுப்பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்!


இருவரையும் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய  போலீசார்  அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆரோக்கியா சகாய தர்மராஜ் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Murugesh M
First published: