• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேடைக்கு வாங்க... வானதி சீனிவாசனை அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேடைக்கு வாங்க... வானதி சீனிவாசனை அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழக அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சென்று சேர்ப்பேன் என்று பேசினார்.

  • Share this:
    கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசனை மேடைக்கு வந்து அமருமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கோவையில் ரூ.87.73 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

    எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அதேவேளையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கீழ் அமர்ந்திருப்பதை பார்த்து, மேடைக்கு வந்து அமருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டார். அவரது அழைப்பை ஏற்று வானதி சீனிவாசனும் மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

    நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன், மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அரசாங்கம் உதவுவதற்கு முன்பாக பல்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் ஓடோடி வந்து  உதவக்கூடிய மக்களை கோவை கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்தில் தேர்ந்தடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் நல திட்டங்களை செயலாற்றும்போது மக்களோடு நெருங்கி இருந்து அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, பல்வேறு கட்சிகளை,  மாறுபட்ட சித்தாங்களை கொண்டவர்களுடன் பணியாற்றினால் திட்டங்களை வேகமாக மக்களிடம் கொண்டு போக முடியும் என்றும் அவர் கூறினார்.  மழை வெள்ள நிவாரண நடவடிக்கையில் அரசு தீவிரமாக இயங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    இதையும் படிங்க: மக்களை பார்க்க நீந்தி வந்துள்ளேன்: சசிகலா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: