• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வில் வென்று சாதித்த கோவை பழங்குடியின மாணவி

நீட் தேர்வில் வென்று சாதித்த கோவை பழங்குடியின மாணவி

நீட் தேர்வில் வென்று சாதித்த கோவை பழங்குடியின மாணவி

நீட் தேர்வில் வென்று சாதித்த கோவை பழங்குடியின மாணவி

அடிப்படை வசதிகள் இல்லாத பழங்குடி கிராமத்தில் படித்து நீட் தேர்வில் மாணவி வெற்றி பெற்று இருப்பது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கோவை மாவட்டம் நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மலசர் பழங்குடி வகுப்பை சேர்ந்த மாணவி சங்கவி நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் குடிசை வீட்டில் இருந்து படித்து முதன்முதலாக மருத்துவகல்லூரி செல்கின்றார் மாணவி சங்கவி.

    கோவை மாவட்டம் வாளையார் அருகே நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடி மாணவி சங்கவி. 2018 ம் ஆண்டு 12 ம் வகுப்பை முடித்த அவர் மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்வு முடிவுகளில் பழங்குடி மாணவி சங்கவி தேர்ச்சி பெற்றுள்ளார். நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மருத்துவகல்லூரிக்கு செல்லும் முதல் மலசர் பழங்குடி மாணவி சங்கவி.

    அடிப்படை வசதிகள் இல்லாத அந்த பழங்குடி கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவியான சங்கவி, உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்த நிலையில் , ஊடகங்களில் செய்தியாக வந்த பின்னர் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைத்தது. இடையில் மாணவியின் தந்தை உயிரிழந்து விட்ட நிலையில் , கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவி சங்கவி படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    டாக்டராக வேண்டும் என்பது தனது கனவு எனவும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து 202 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே தனது கனவு எனவும் தெரிவித்தார். நீட் தேர்வை பார்த்து பயப்பட கூடாது எனவும், நம்மால் முடிந்த வரை முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், தன்னை பார்த்து இன்னும் பல பேர் கிராமத்தில் படித்து முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மருத்துவகல்வி படிக்க அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மாணவி சங்கவி கேட்டுக்கொண்டார். தனது மகள் மருத்து வபடிப்பிற்கு தேர்ச்சி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மருத்துவ வசதி கிடைக்காத பலருக்கு உதவ , நன்றாக படிக்க வேண்டும் என மகளை அறிவுறுத்தியதாகவும் தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: