• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிளாக்கில் வாங்கி விடிய விடிய மது குடித்த மூவர் சாலையில் மயங்கி விழுந்து பலி - கோவையில் சம்பவம்

பிளாக்கில் வாங்கி விடிய விடிய மது குடித்த மூவர் சாலையில் மயங்கி விழுந்து பலி - கோவையில் சம்பவம்

Coimbatore

Coimbatore

இன்று காலை 6 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர்.

  • Share this:
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தீபாவளி கொண்டாட அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள மதுபாட்டிலை கைபற்றிய போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55),சக்திவேல்(61). இவர்களில் பார்த்திபனும், சக்திவேலும் பெயின்டராக பணிபுரிந்து வருகின்றனர். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்து வருகின்றார். நண்பர்களான மூவரும் நேற்று இரவு தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். அருந்ததியர் வீதி அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சக்திவேல் மட்டும் அந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். முருகானந்தம் பாரதியார் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.

Also read:  பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய நிஜ பாஸ்போர்ட்.. இதெப்படி சாத்தியம்?

இதனையடுத்து அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதனிடையே இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடிய போது அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also read:  ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

மேலும் இரவு மதுக்குடித்த பின் மீண்டும் காலையில் பிளாக்கில் மதுபானம் வாங்கிய நிலையில், யாரிடம் மது பானம் வாங்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதி அருந்திய நிலையில் கைப்பற்றபட்ட மதுபான பாட்டிலை கைப்பற்றிய போலீசார் அந்த மதுபானத்தை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் மூவரும் மது அருந்திய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: