• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரே வீட்டில் இரண்டாவது கொள்ளை.. முன்னாள் காவலரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் - போலீஸ் விசாரணை

ஒரே வீட்டில் இரண்டாவது கொள்ளை.. முன்னாள் காவலரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் - போலீஸ் விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக வீட்டின் கதவை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியில் நிர்மலா என்பவரின் வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட முன்னாள் காவலரை பொதுமக்களே சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியினை சேர்த்வர்  நிர்மலா. கணவரை இழந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். நிர்மலா  அருகில் உள்ள தனது தாயார் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தைகளுடன்  தங்குவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் தாயார் வீட்டிற்கு நிர்மலா குழந்தைகளுடன் சென்ற நிலையில் அவரது வீட்டை உடைக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் ஒன்று சேர்ந்து திருடர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி விட்ட நிலையில் ஒருவரை மட்டும் பிடித்தனர்.

    மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில்  திருடர்கள் இருவரும் முகமூடி எதுவும் போடாமால் சர்வ சாதாரணமாக  கதவை உடைத்து திருடி இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில்  ஒரு திருடன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிய நிலையில் மற்றொருவர் தப்பிய நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருடன் பிடிபட்ட நிலையில் அவரை வேகமாக அழைத்து செல்வதிலேயே வேகம் காட்டினர்.

    இந்நிலையில் பிடிபட்ட திருடனை ஒன்றுமே சொல்லாமல் காவல் துறையினர் அழைத்து சென்றது பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தவே பொது மக்கள் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொது மக்களை எச்சரித்த போலீசார் பிடிபட்ட நபரை அழைத்து சென்றனர். இந்நிலையில் கருமத்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட திருடன் முன்னாள் காவலர் முனீஸ்வரன் என்பதும் , கோவை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து முனீஸ்வரனை கைது செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் அவருடன் வந்த மற்றொரு நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்து வருகின்றனர். கைதான முன்னாள் காவலர் முனீஸ்வரன் மீது இரு செயின் பறிப்பு வழக்குகள், ஒரு மொபைல் திருட்டு வழக்கு, ஒரு இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையிடம் பிடிபட்டவுடன் முனீஸ்வரன் போலீசாரிடம் ஏதோ சொல்வதும் , அதன் பின்னர் காவல்துறையினர் பொது மக்களை சமாதானபடுத்தி இருப்பதை அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் நிர்மலாவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போன நிலையில் ஓரே மாதத்தில் மீண்டும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக வீட்டின் கதவை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: