முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்வு அறைகளில் செல்போன் பயன்படுத்தினால் கண்டுபிடிக்கும் புதிய டிடெக்டர் கருவி - கோவை பெண் உதவிப்பேராசிரியர் அசத்தல்

தேர்வு அறைகளில் செல்போன் பயன்படுத்தினால் கண்டுபிடிக்கும் புதிய டிடெக்டர் கருவி - கோவை பெண் உதவிப்பேராசிரியர் அசத்தல்

மொபைல் பக் டிடெக்டர் கருவி

மொபைல் பக் டிடெக்டர் கருவி

Mobile Detector : தேர்வு அறைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க, கோவை ஆசிரியர் புதிய கருவியை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளார்.

  • Last Updated :

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் தேர்வு அறைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மொபைல் பக் என்ற டிடெக்டர் கருவியை கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை பெற்றுள்ளார்.

தேர்வு அறைக்குள் மாணவர்கள் செல்போன், ப்ளூடூத் போன்ற தகவல் பரிமாற்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை உள்ளது.  இருப்பினும் சில மாணவர்கள் செல்போன்களை ஆசிரியர்களுக்குத் தெரியாமல் மறைத்து தேர்வு அறைக்குள் கொண்டு செல்கின்றனர். இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்துகிறது.

அதே போல ஜாமர் போன்ற கருவிகளை பயன்படுத்தும் பொழுது செல்போன் மட்டுமல்லாமல் அனைத்து இணையதள நெட்வர்க்குகளும் தடைபடுகிறது. இது மற்ற பணிகளையும் பாதிக்கிறது. இந்தநிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மொபைல் பக் என்ற டிடெக்டரை கடந்த 2012 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்.

இது செல்போனின் சிக்னலை மட்டும் டிராக் செய்யும் தன்மை கொண்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது. இந்தக் கருவி அனலாக் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனை பயன்படுத்தி கைபேசியில் உள்ள சிக்னல்களை தெளிவாக உணரும் தன்மை கொண்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் பிரியதர்ஷினி கூறும் பொழுது, ஒரு ஆசிரியராக தேர்வறையில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொபைல் பக்கை கண்டுபிடித்துள்ளேன். இந்த இன்வென்ஷ்னுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த இன்வென்ஷனை அனைத்து துறைக்கும் பயன்படுத்தும் படியாக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

உதவிப்பேராசிரியர் பிரியதர்ஷினி

Read More : 10 நிமிடத்தில் உணவு டெலிவரி... ஜொமேட்டோ நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தும் சென்னை போக்குவரத்து காவல்துறை

இந்த டிவைஸை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரித்தோம். முழுக்க முழுக்க நானே முயற்சி செய்து தயாரித்தேன். இருக்கும் பொருட்களை வைத்தே இதை தயாரித்தேன். இந்த கண்டுபிடிப்புக்கு கல்லூரியும் எங்கள் துறை சார்ந்தவர்களும் உதவியாக இருந்தனர். இந்த சென்சாரை 5 முதல் 10 மீட்டர் வரை ட்யூன் செய்து கொள்ள முடியும்.

Must Read : சைவ உணவு மட்டும்தான்..! இலவச கழிப்பிடம் - அரசு பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த புதிய நிபந்தனைகள்

மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை உறுதிப்படுத்த இந்த கருவி உதவியாக இருக்கும். தேர்வு அலுவலகத்தில் நடைபெறும் பிரச்னைகளை குறைக்க முடியும். இந்த டிடெக்டர் பயன்படுத்துவதால் மொபைல் ட்ராக்கிங் மற்றும் மொபைல் ரெக்கார்டிங்கை தடுக்க முடியும். இதன்மூலம் தனி உரிமை தடைபடாது என தெரிவித்தார்.

செய்தியாளர் - ஜெரால்ட், கோவை.

First published:

Tags: Coimbatore, Exam, Mobile phone