இனி வேலை தேடி சென்னை போக வேண்டாம்- தென் மாவட்டங்களிலேயே ஐ.டி. பூங்காக்கள்: அமைச்சர் தகவல்!

மாதிரிப் படம்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவும், இந்தத் துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுமே அரசின் நோக்கம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

  • Share this:
தென் மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி சென்னை போன்ற பகுதிகளுக்கு  செல்வதை தவிர்க்க, தென் மாவட்டங்களில் தகவல் தொழில் நுட்ப பூங்காகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்தார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள டைடல் பார்க்கில் புதியதாக சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் 114 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான  பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்,விரைந்து கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டபடி அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

பின்னர் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் 114 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து ,  விரைவில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு; நீதிமன்றம் உத்தரவு!


 தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவும், இந்தத் துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுமே நோக்கம் என தெரிவித்த அவர்,  தென் மாவட்டங்களில் மிகக்குறைவாகவே தொழில் வாய்ப்பு உள்ளது  எனவும் அதனால் அங்கு உள்ள படித்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை போன்ற பிற மாவட்டங்களை தேடி செல்ல கூடிய சூழல் உள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே...


எனவே தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கி சென்று விட்டது எனவும் தெரிவித்த மனோ தங்கராஜ், தற்போது புதியதாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாத ஊதியம் ரூ.90,000.. சென்னை மாநகராட்சி வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி மறவாதீர்கள்!


புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க புதிய திட்டங்களையும், கொள்கைகளையும் வகுக்க இருப்பதாகவும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்தார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப துறையின் செயலாளர் நீரஜ்மித்தல், மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்: குருசாமி- கோவை
Published by:Murugesh M
First published: