• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை மாணவி தற்கொலை: தலைமறைவான பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படை அமைப்பு..

கோவை மாணவி தற்கொலை: தலைமறைவான பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படை அமைப்பு..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு, பள்ளி முதல்வரை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக துணை ஆணையர் ஜெயசந்திரன் பேட்டி

  • Share this:
கோவை தனியார் பள்ளி முதல்வர்  மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள்,  தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில்  பள்ளி இயற்பியல் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்  மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also read:   ரூ.52,000 அபேஸ்... மொபைல் தொலைந்து போனால் இப்படியும் ஒரு பிரச்னை இருக்கு..!

மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர்  மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் கோவை மாநகர காவல்  துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது ஏற்கனவே ஆசிரியர்  மீது போடப்பட்ட வழக்கில் முதல்வரும் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Also read:  பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

இந்த வழக்கில் பள்ளி முதல்வர் குற்றவாளியாக  சேர்க்கப்பட்டு  ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது எனவும், தலைமறைவாகியுள்ள  பள்ளி முதல்வரை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார். எனினும் போராட்டக்காரர்கள்  கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: