• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாஸாக கோவை திரும்பிய எஸ்.பி.வேலுமணி: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

மாஸாக கோவை திரும்பிய எஸ்.பி.வேலுமணி: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

வேலுமணி

வேலுமணி

கோவையில் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தும் தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு காலை, மதியம் ஆகிய வேளைகளில் உணவு, டீ, ரோஸ் மில்க் என உபசரிப்பு வழங்கப்பட்டது.

  • Share this:
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பின்னர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவை திரும்பிய நிலையில், அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய அதிமுகவின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், அலுவலங்கள் போன்றவற்றில்  கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ நமது அம்மா’ அலுவலகத்திலும் சோதனி நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ. 811 கோடி அளவுக்கு ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை  நடைபெற்றது.

இதையும் படிங்க: சாதனை.. சோதனை.. வேதனை - நிதிநிலை அறிக்கையும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனமும்


இதேபோல், சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த எஸ்.பி.வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.  கோவையில் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தும் தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு காலை, மதியம் ஆகிய வேளைகளில் உணவு, டீ, ரோஸ் மில்க் என உபசரிப்பு வழங்கப்பட்டது.



இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பின்னர் முதன்முறையாக எஸ்.பி.வேலுமணி இன்று கோவை திரும்பினார். அவருக்கு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமானநிலையத்தில் இருந்து தொண்டர்கள் மத்தியில் அவர் ஊர்வலமாக வந்தார். கோவையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக பதிவாகிவரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ரேசனில் கருப்பட்டி-வேளாண் பட்ஜெட்டில் பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: