கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு: சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து!

சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி

கோவை நாகசக்தி அம்மன் பீடம்  சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் எதிர்ப்பு

  • Share this:
கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு எனவும், கொரோனா சம்கார தேவிக்குத்தான் சிலை வைத்திருக்க வேண்டும் என நாகசக்தி பீடத்தை சேர்ந்த சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நாகசக்தி அம்மன் பீடம்  அமைந்துள்ளது.இந்த பீடத்தை சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களாக  டெங்கு, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் பரவல்களின் போது நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  ஆங்காங்கே கபசுர குடிநீர், மூலிகை கசாயம்  போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றார்.

சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் சூலூர் பட்டணம் பகுதியில் கொரானா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில், நாகசத்தி அம்மன் சித்தர் பீடம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் மூலிகை கசாயத்தை  பொதுமக்களுக்கு வழங்கினார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழக அரசு சித்த வைத்தியத்திற்கு முழு அனுமதி அளித்தால் தமிழ்நாட்டில்  கொரானா நோயாளி  உயிரிழப்பு இல்லாமல் , கொரானா தொற்றை முழுமையாக ஒழித்துவிட முடியும் எனவும் , சித்தா மற்றும் அயுர்வேதா மருத்துவம் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

மேலும் கோவையில் கொரானா தேவிக்கு சிலை வைத்து இருப்பது  தவறு எனவும், கொரானா சம்கார தேவிக்குதான் உண்மையில்  சிலை வைத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க.. தஞ்சையில் 117 மையங்களில் தடுப்பூசி இல்லை..

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் காமாட்சிபுரி ஆதீன மடத்தில் கொரோனா தேவிக்கு சிலை வைக்கப்பட்டு பூசைகள் நடத்தப்பட்டு வருகின்றது. 48 நாட்கள் நடைபெறும் இந்த யாக பூசைக்கு பின்னரே பொதுமக்களுக்கு வழிபட அனுமதி அளிக்கப்படும் என காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார். இந் நிலையில், கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என  கோவை நாகசக்தி அம்மன்  பீடத்தினை சேர்ந்த சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்:குருசாமி, கோவை
Published by:Murugesh M
First published: