கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்: சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

சசிகலா ஆதரவு போஸ்டர்

சீக்கிரமே அதிமுகவிற்கு தலைமையேற்க வருவேன் என சசிகலா தெரிவித்து வரும் நிலையில் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொங்கு மண்டலத்தை வழிநடத்த வேண்டும் என  வரவேற்று அக்கட்சியினர் நோட்டீஸ் ஒட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர் என அமமுக சார்பில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் அதிமுக தொண்டர்கள் மத்தியில் தினமும் சசிகலா தொலைபேசி மூலம் பேசி வருகிறார். தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகிறது. சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வர வேண்டும் என அதிமுகவில் உள்ள சிலர் பேசும்  ஆடியோகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

அதிமுகவுக்கு விரைவில் தலைமை ஏற்க வருவேன் என சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது: ஜெயக்குமார் காட்டம்!


அந்த சுவரொட்டிகளில் கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்  போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. சீக்கிரமே அதிமுகவிற்கு தலைமையேற்க வருவேன் என சசிகலா தெரிவித்து வரும் நிலையில் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொங்கு மண்டலத்தை வழிநடத்த வேண்டும் என  வரவேற்று அக்கட்சியினர் நோட்டீஸ் ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த மழை!

Published by:Murugesh M
First published: