Home /News /tamil-nadu /

இரண்டு மணி நேர மழைக்கு தாங்காத கோவை..தீர்வு காண கோரும் பொதுமக்கள்.!

இரண்டு மணி நேர மழைக்கு தாங்காத கோவை..தீர்வு காண கோரும் பொதுமக்கள்.!

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

சுமார் 2 மணி நேர மழைக்கே கோவை மாநகரம் முடங்கியது என்றால், தொடர் மழை பெய்தால் என்ன நிலை ஏற்படும் என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

    கோவையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் போக்குவரத்து முழுவதும் முடங்கி, பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    தமிழகத்தில் கனமழை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து கோவையில் நேற்று மதியம் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோவையில் ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    இதனால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கியது.

    குறிப்பாக கோவை மாநகரில் உள்ள கிக்கானி மேம்பாலம், உப்பிலிபாளையம் மேம்பாலம், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலம் ஆகியவை நிரம்பியது.
    இதில் உப்பிலிபாளையம் மேம்பாலம் பகுதியில் மேம்பாலம் நிரம்பியது. இதில் கார் ஒன்று மாட்டிக்கொண்டது. தொடர்ந்து இதை தீயணைப்பு துறையினர் மீட்க முயன்றனர். அதேபோல அந்த நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Also Read: இனியும்‌ இதை எல்லாம்‌ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.. கொதிக்கும் சசிகலா!!

    அதைப்போல கோவை அரசு மருத்துவமனை ரயில்வே பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நீர் தேங்கியது. இந்த நிலையில் சிகரம் என்ற 22ம் நம்பர் தனியார் பேருந்து மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்தும் சாகசம் செய்வது போல பேருந்தைப் பாலத்தில் இயக்கியது.இதைதொடர்ந்து பேருந்து ஆனது பாலத்தின் அடியில் பயணிகளுடன் நடுவழியில் நின்றது. இதையடுத்து பயணிகள் சிரமமான சூழலில் பேருந்திலிருந்து வெளியேறி பாலத்தை கடந்தனர்.

    இப்படி கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம், மற்றும் அரசு மருத்துவமனை ரயில்வே பாலம் நீரால் நிரம்பி போக்குவரத்து தடைபட்டதால், வாகனங்கள் வெளியேற முடியாமல் மக்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போக வேண்டிய இடங்களுக்கு செல்ல  முடியாமல் திணறி வருகின்றனர்.

    Also Read: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி?

    குறிப்பாக காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒவ்வொன்றும் ஊர்ந்து சென்றது.அதேபோல கோவை அரசு மருத்துவமனையிலும் மழைநீர் தேங்கியதால் நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் பெரும் சிரமம் அடைந்தனர்.

    சுமார் 2 மணி நேர மழைக்கே கோவை மாநகரம் முடங்கியது என்றால், தொடர் மழை பெய்தால் என்ன நிலை ஏற்படும் என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போதுஇரண்டு மணி நேர மழைக்கு கோவையின் நிலைமை இப்படி என்றால் தொடர் மழை பெய்தால் என்னவாகும். அரசு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும் என தெரிவித்தனர்.

    செய்தியாளர்: ஆரோக்கிய ஜெரால்டு (கோயம்புத்தூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Flood, Flood alert, Heavy Rainfall, Mansoon Rain, Tamil News

    அடுத்த செய்தி