முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'கோயம்பத்தூர்' ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையால் கோயம்புத்தூருக்கு வந்த சோதனை

'கோயம்பத்தூர்' ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையால் கோயம்புத்தூருக்கு வந்த சோதனை

கோயம்புத்தூர் ரயில் நிலையம்

கோயம்புத்தூர் ரயில் நிலையம்

Coimbatore Railway Station | கோவை ரயில் நிலையம் முன் வாசலில் கோயம்புத்தூர் என்றும் பின் வாசலில் கோயம்பத்தூர் என்று எழுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  • Last Updated :

மத்திய அரசின் திட்டங்களில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் தமிழ் எழுத்தில் ரயில் நிலைய ஊர்களின் பெயர்ப்பலகைகளில் உள்ள பெயர்கள் கூட பிழையுடன் எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஆறு நடைமேடைகள் 20 இரும்பு பாதைகளை கொண்ட தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோயம்புத்தூரின் சிறப்பு வாய்ந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் தமிழில் கோயம்பத்தூர் ரயில் நிலையம் என ரயில் நிலையத்தின் பின் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தின் முன்வாசலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் என எழுதப்பட்டு உள்ள நிலையில் பின் வாசலில் கோயம்பத்தூர் என தவறாக பெயர் பலகையில் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : இலங்கை மக்களுக்கு உதவ விசிக எம்எல்ஏ-கள் ஒரு மாத ஊதியம் நிவாரணம் - ஆளூர் ஷானவாஸ் அறிவிப்பு

தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தமிழில் எழுதும்போது பிழையுடன் எழுதப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது பின் வாசலில் கோயம்பத்தூர் என பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது விரைவில் இது சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர் : ஜெரால்ட், கோயம்புத்தூர்

First published:

Tags: Coimbatore