• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சினிமா பாணியில் சேஸிங்.. பைக் திருடர்களை துரத்திப்பிடித்த காவல் ஆய்வாளர்

சினிமா பாணியில் சேஸிங்.. பைக் திருடர்களை துரத்திப்பிடித்த காவல் ஆய்வாளர்

கோவை பைக் திருடர்களை பிடித்த காவல் ஆய்வாளர்

கோவை பைக் திருடர்களை பிடித்த காவல் ஆய்வாளர்

காவல் ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று  திருடனை பிடித்தார். 

  • Share this:
    கோவை மாவட்டம் சூலூர் அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன திருடர்களை இரவு ரோந்தின் போது சூலூர் ஆய்வாளர் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    கோவை மாவட்டம் சூலூரில் நேற்று நள்ளிரவு சூலூர் வட்ட ஆய்வாளர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீலம்பூர் எல்என்டி பைபாஸ் சாலையில் சந்தேகத்துக்கிடமான இருவர் நின்று இருப்பதை பார்த்து, அவர்களிடம் எதற்காக நிற்கிறீர்கள் என விசாரித்த போது அவர்கள் வேகமாக  இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அவர்களை ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றபோது முதலிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகன திருடர்கள் வாகனத்தை போட்டுவிட்டு சாலையில் தப்பியோடினர்.

    Also Read:  கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

    அப்போது காவல் ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று  பிடித்தார்.  இரு சக்கர வாகன திருடனுடன் கட்டி புரண்டு  போராடியதில் ஆய்வாளரன் சீருடை கிழிந்தது. இருந்தாலும் விடாமல் இருசக்கர வாகன திருடர்களில் ஒருவரை  பிடித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசாரின் உதவியுடன் அவரை சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.

    போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிப்பட்ட நபர் விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (23) எனத் தெரியவந்தது.மேலும் தப்பியோடிய நபர் சென்னையை சேர்ந்த சங்கர் என்பதும்  தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோவை லட்சுமி மில்  பகுதியில் தங்கியிருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.தப்பியோடிய இருசக்கர வாகன திருடர்களை காவல் ஆய்வாளரும் , போலீசாரும்  துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தின்போது தப்பியோடிய மற்றொரு வாகன திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: