Home /News /tamil-nadu /

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா YouTube சேனல்கள் முடக்க நடவடிக்கை - கோவை மாவட்ட போலீஸார் தகவல்

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா YouTube சேனல்கள் முடக்க நடவடிக்கை - கோவை மாவட்ட போலீஸார் தகவல்

டிக் டாக் சூர்யா

டிக் டாக் சூர்யா

Tiktok பிரபலம் ரவுடி பேபி சூர்யாவின் Youtube சேனல்களை  முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கோவை சைபர் கிரைம் போலீசாரால் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷாவும் நடத்தி் வரும் யூ டியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்

சமூகவலைதளங்களான டிக்டாக், யூ டியூப் போன்றவற்றில் பிரபலமாக வலம் வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கத்தர்ஷா ஆகியோரை நேற்று மதுரையில் வைத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து திலகா என்ற யூடியூபர் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை இருவரையும் கைது செய்தது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யூடியூபர் தம்பதியை இழிவாக பேசியும், அவர்களின் தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன்  ரவுடிபேபி சூர்யா மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Also Read:  ‘உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்’ - மழுப்பிய இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்,சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் யூடியூப்பில் பதிவு செய்து வருவதாகவும், இதுசமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்கள் இருவரும் நடத்தி வரும் surya media மற்றும் singer sikka  official ஆகிய யூடியூப் சேனல்களை  முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read : மருமகளிடம் அத்துமீறிய மாமனார் - அடங்காத தந்தையை அடித்துக்கொன்ற மகன்

மேலும் சமூக வலைதளங்களில் சமூகநலன்களையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வோரின் சேனல்களும் முடக்கப்பட்டு அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள், Surya, Tik Tok, Youtube

அடுத்த செய்தி