இந்து மதத்தை சொல்லாமல் வேறு எந்த சீர் திருத்தம் செய்திருந்தாலும் இந்துத்துவ அமைப்பினரே பெரியாருக்கு சிலை வைத்திருப்பார்கள் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தக அறிமுக விழா நடைபெற்றது. இதில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன் , எழுத்தாளர் பாமரன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
திமுக துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா பேசும்போது, தத்துவங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வர நூற்றாண்டுகளாகும் , வாழ்ந்த காலத்தில் தத்துவத்தை சொல்லி, அது ஆட்சி பொறுப்பிற்கு வந்ததை பார்த்த ஓரே தலைவர் பெரியார்தான் என்று அண்ணா சொல்லுவார் என தெரிவித்தார்.
சிந்தனையாளர்களுக்கும் தத்துவவியலாளர்களுக்கும் மொழியில்லை, பெரியாரை மொழிக்குள் அடைக்க பார்க்கின்றனர் எனத்தெரிவித்த அவர், ‘எனக்கு மொழிபற்று , நாட்டுபற்று ,தேசப்பற்று கிடையாது . இருப்பது மனிதபற்றுதான் என்று சொன்னவர் பெரியார்’ என தெரிவித்தார். மேலும், பெரியாரை எப்படியாவது சிறுமைபடுத்த முடியுமா என பார்க்கின்றனர். மா.பொ.சியில் இருந்து மணியரசன் வரைக்கும் தமிழ்தேசியத்தில் குழப்பம் உள்ளது.
இதையும் படிங்க: பெரியாராக நடிப்பதே கஷ்டம்.. வாழ்வது அதைவிட கஷ்டம் - சத்யராஜ்
அம்பேத்கர் புத்தகத்தை தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். தமிழன் என்று வைத்தால் அக்கிரகாரத்தில் இருப்பவனும் உள்ளே வருவான், அதற்கு வேலி கட்டவே திராவிடன் என்ற பெயரை பயன்படுத்தினார் பெரியார். இந்து மதத்தை சொல்லாமல் வேறு எந்த சீர் திருத்தம் செய்திருந்தாலும் அவர்கள் (இந்துத்துவ அமைப்பினர்) பெரியாருக்கு சிலை வைத்து இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேச்சு: இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவு
அம்பேத்கரை எப்படியாவது வளைக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்பினர் பார்க்கின்றனர், அம்பேத்கரை அரவணைக்க முயல்கின்றனர், ஆனால் பெரியார் என்ற நெருப்பை இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். இந்து மதத்திற்கு இப்போது உள்ள சிவன், விஷ்ணு எல்லாம் கடவுளா? இந்து மதத்திற்கு வாயு , அக்னி,இந்திரன் ஆகியவைதான் கடவுள் எனவும் ஆ.ராசா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.