சொந்த ஊர்களுக்கு செல்ல குவியும் பயணிகள்: குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார்!

சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் இருந்து மதுரை , நெல்லை உட்பட வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்

 • Share this:
  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் இருந்து மதுரை , நெல்லை உட்பட வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வரும்  மே10 ம் தேதி முதல் மே 24ம் தேதிவரை  இரண்டு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் , கோவையில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

  இன்றும் நாளையும் தொடர்ச்சியாக பேருந்து சேவை இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், முழு ஊரடங்கு அறிவிப்பு  வந்ததிலிருந்தே பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

  இதனால் ஏராளமானோர், தங்கள் சொந்த  ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். மதுரை, நெல்லை, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

  நாளை ஞாயிற் கிழமை இன்னும் கூடுதலாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சொல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வர வாய்ப்பிருக்கும் நிலையில், கூடுதல் பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேருந்து பற்றாக்குறையை பயன்படுத்தி தனியார் வேன் மற்றும் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பொது மக்களை அழைத்துச் செல்லும் நிலை இருப்பதாகவும், இதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: