• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாயை கொடூரமாக தாக்கி சித்தரவதை: உரிமையாளர் சிறையில் அடைப்பு!

நாயை கொடூரமாக தாக்கி சித்தரவதை: உரிமையாளர் சிறையில் அடைப்பு!

நாய் மீது தாக்குதல்

நாய் மீது தாக்குதல்

மாரிமுத்து தனது நாயை கொடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்க சென்ற பிராணிகள் நல வாரிய அதிகாரியையும் மாரிமித்து தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.

  • Share this:
    கோவையில் நாயை ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ வெளியானது.  இது தொடர்பான புகாரில் பேரில் தனது வளர்ப்பு நாகை தாக்கிய நபரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே கீரநத்தம் - புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை, மின் கம்பத்தில் கட்டிவைத்து   சரமாரியாக தாக்கி, அதை துன்புறுத்தியுள்ளார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

    நாயை கொடூரமாக தாக்கிய மாரிமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை பார்த்த, கோவையைச் சேர்ந்த பிராணிகள் நல சங்க நிர்வாகி மினிவாசுதேவன், மாரிமுத்துவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.  பிராணிகள் நல சங்க நிர்வாகிகளை சரமாரியாக கெட்ட வார்த்தையில் திட்டியும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் மாரிமுத்து எச்சரித்துள்ளார்.

    இதனால் மினிவாசுதேவன், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் மாரிமுத்து மீது புகார் அளித்தார். இதனையடுத்து நாயை துன்புறுத்தி, சித்திரவதை படுத்தியதாக கூறி மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.  கடுமையான தாக்குதலுக்கு ஆளான அந்த நாயை மீட்ட பிராணிகள் நலச்சங்கத்தினர் அதனை தங்களது காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர் .

    இதையும் படிங்க: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: