கோவையில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது!

அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு லிட்டர் சாராயத்தையும், சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் குக்கர் உட்பட பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு லிட்டர் சாராயத்தையும், சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் குக்கர் உட்பட பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Share this:
கோவை சாய்பாபா காலனி பகுதியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து சாராயம் காட்சி லிட்டர் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்த துணிகடை உரிமையாளர் மோகன் நாயர் என்பவரை சாய்பாபா காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன் நாயர் . இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் . கொரோனா தொற்று காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மோகன் நாயர் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார் .
வீட்டில் எந்த வேலையும் இல்லாத அவர் சாராயம் காய்ச்சி விற்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி லிட்டர் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  சாராய விற்பனை நடப்பது குறித்து தகவலறிந்த பொதுமக்கள், சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மோகன் நாயர்  வீட்டிற்கு உளவாளி ஒருவரை அனுப்பி சாராயம் வாங்கி வர செய்தனர். சாராய விற்பனை நடைபெறுவதை  உறுதி செய்த சாய்பாபா  காலனி போலீசார், மோகன் நாயரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம் காய்ச்சுவது மற்றும் அதற்குத் தேவையான மூலப் பொருட்களையும்  உபகரணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் யூடியூப் பார்த்து  சாராயம் காய்ச்சுவது எப்படி என தெரிந்து கொண்டு, வீட்டில் இருந்த குக்கர் மற்றும் கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டதும், கொரொனா காலகட்டத்தைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு சாராயத்தை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு லிட்டர் சாராயத்தையும், சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் குக்கர் உட்பட பல பொருட்களையும் போலீசார்  பறிமுதல் செய்தனர்.

இது ஊரடங்கு காலம் என்பதாலும், டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டு இருப்பதாலும் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் மோகன் நாயரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published: