• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் விமானப் படை அதிகாரி பாலியல் வன்புணர்வு: லெப்டினன்ட் அதிகாரி கைது!

பெண் விமானப் படை அதிகாரி பாலியல் வன்புணர்வு: லெப்டினன்ட் அதிகாரி கைது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை காவல் துறையினரின் நடவடிக்கைக்கு  இந்திய விமான படை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் மீது குழு அமைத்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்திய விமான படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

  • Share this:
கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய  விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரிபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் லெப்டினன்ட் அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து விமான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் 15 ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானபடையில் பிளைட்  லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கும் 30 அதிகாரிகள் பயிற்சிக்காக வந்தனர். இவர்களில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் கல்லூரி வளாகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மாதம் 10 ம் தேதி விளையாட்டின் போது 27 வயதான  பெண் அதிகாரிக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அறையில் மாத்திரை சாப்பிட்டுள்ளார். மேலும் அன்று இரவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மது விருந்திலும் பெண் அதிகாரி கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் அளவிற்கு அதிகமாக குடிக்கவே அந்த பெண் விமான படை அதிகாரியை சக பெண் விமான படை அதிகாரி அவரது அறையில் கொண்டு வந்து படுக்கவைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் பெண் அதிகாரியின் அறைக்கு சென்ற சக விமான படை அதிகாரியான அமிர்தேஷ் (27) பெண் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மறுநாள் காலை சக பெண் விமான படை அதிகாரிகள் பெண் அதிகாரியை பார்க்க வந்த போது அமிர்தேஷிம் இருந்துள்ளார். அவர்கள் பெண் அதிகாரியை எழுப்பிய பின்னரே பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரியவந்து.

மேலும் படிக்க: கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி: அதிரடியை தொடங்கியது தமிழக அரசு!


இது குறித்து11 ம் தேதி இந்திய  விமானபடை உயரதிகாரிகளிடம் பெண் அதிகாரி புகார் கொடுத்தார். ஆனால் விமான படை அதிகாரிகளின் நடவடிக்கைகள்  காலதாமதமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட விமான படை பெண் அதிகாரி இது குறித்து ஆன் லைன் மூலம்  கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் மீது பாலியல் வன்புணர்வு ( ipc 376)வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடுகளுக்கு சென்று அழைத்த மாவட்ட ஆட்சியர்!


இந்நிலையில் நேற்று விமான படை கல்லூரியில் இருந்த அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை காவல் துறையினர் கைது செய்து  நேற்றிரவு நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். அப்போது விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் அபிடவிட் தாக்கல் செய்தார். இந்நிலையில்  கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷைஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்திரவிட்டார்.



இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.  இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை காவல் துறையினரின் நடவடிக்கைக்கு  இந்திய விமான படை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் மீது குழு அமைத்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்திய விமான படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதனிடையே காவல்துறையினர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பிளைட்  லெப்டினன்ட் அமிர்தேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் , நாளை காலை இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: