ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரோனா; காவல் நிலையம் மூடல்: தற்காலிக காவல்நிலையமான திருமண மண்டபம்

செல்வபுரம் காவல்நிலையம்

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது

 • Share this:
  கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

  தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்ததாக கோவையில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது.

  நேற்று ஒரேநாளில் கோவையில் 2,117 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 10,925 பேர் சிகிச்சையில் உள்ளனர். 750 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

  இந்நிலையில் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்கள் என ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றுக்கு உள்ளான காவலர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே காவல் நிலையத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது .

  மேலும் படிக்க.. முழு ஊடங்கின்போது அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்..

  செல்வபுரம் காவல் நிலைய கட்டிடத்திற்கு எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டது. மேலும் செல்வபுரம் காவல் நிலையம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: