Home /News /tamil-nadu /

கள்ளக்காதலியுடன் வசித்து வந்த தந்தை கொலை.. தலைமறைவாக இருந்த மகன் கைது

கள்ளக்காதலியுடன் வசித்து வந்த தந்தை கொலை.. தலைமறைவாக இருந்த மகன் கைது

கோவை கொலை சம்பவம்

கோவை கொலை சம்பவம்

Coimbatore: கள்ளக்காதலி வீட்டருகே தந்தை மகன் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் தந்தையிடம் பணம் கேட்டு ஏற்பட்ட பிரச்னையில் தந்தையை மகன் கொலை செய்து தலைமறைவாக இருந்த நிலையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று மகனை கைது செய்தனர்.

    கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் குடிசை மாற்றுவாரிய ஹவுசிங் யூனிட்டில் வசித்துவந்த கருப்பசாமி (வயது 61). கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து பெயிண்டிங் செய்து வந்தார்.

    கருப்பசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புலியகுளம் பகுதியை சேர்ந்த விமலா (51) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்தனர்.
    இந்நிலையில் கருப்பசாமி பணியில் இருந்து ஓய்வு பெற்றதால் கிடைத்த ஓய்வூதிய பணத்தை தனது குடும்பத்தினரிடம் கொடுக்காமல் கள்ளக்காதலி விமலாவிடம் கொடுத்துள்ளார். இதனால்  கருப்பசாமிக்கும், அவரது மகன் சுரேசுக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    Also Read:  தூத்துக்குடியில் மது போதையில் சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்... பொதுமக்கள் சாலை மறியல்

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் புலியகுளம் வந்த சுரேஷ் கள்ளக்காதலி வீட்டருகே இருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது தந்தை கருப்பசாமியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று  தலைமறைவானார்.

    கள்ளக்காதலி வீட்டருகே கருப்பசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார் சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் : ஜெரால்ட் (கோவை )
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Crime News, Illegal affair, Illegal relationship, Murder, Police, Tamil News

    அடுத்த செய்தி