முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குறும்புத்தனம் செய்த ஒரு வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்த பாட்டி... கோவையில் கொடூரம்

குறும்புத்தனம் செய்த ஒரு வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்த பாட்டி... கோவையில் கொடூரம்

குழந்தை பிறப்புக்கு பின் : தைராய்டு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் பல சிக்கல்கள் உருவாகும். குறிப்பாக சரியான கரு வளர்ச்சி இல்லாதது, குறை மாதத்தில் குழந்தை பிறத்தல், குழந்தை அதன் செயல்பாடுகளை மெதுவாக செய்தல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில குழந்தைகளுக்கு தீவிரமான நோய் பாதிப்புகளையும் இது தரும்.

குழந்தை பிறப்புக்கு பின் : தைராய்டு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் பல சிக்கல்கள் உருவாகும். குறிப்பாக சரியான கரு வளர்ச்சி இல்லாதது, குறை மாதத்தில் குழந்தை பிறத்தல், குழந்தை அதன் செயல்பாடுகளை மெதுவாக செய்தல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில குழந்தைகளுக்கு தீவிரமான நோய் பாதிப்புகளையும் இது தரும்.

குழந்தையை தாக்கியதையும், கத்திக்கொண்டே இருந்ததால் வாயில் பிளாஸ்டிக் கவரை திணித்து தொட்டிலில் படுக்க வைத்ததை ஒப்புக்கொண்டார் பாட்டி நாகலட்சுமி.

  • Last Updated :

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டில் குறும்புத்தனம் செய்த ஒரு வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் கவுளிபிரவுன் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம் - நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் நந்தினி ஒரு வயதாகும் தனது இளைய மகன் துர்கேஷை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் நாகலட்சுமி (வயது 52) வீட்டில் தங்கியிருந்தார்.

நந்தினி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில், தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு திரும்புவார். குழந்தை துர்கேசை நந்தினியின் தாயார் நாகலட்சுமி கவனித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்றும் வழக்கம் போல நந்தினி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பிய போது துர்கேஷ் பேச்சு மூச்சு இல்லாமல் தொட்டிலில் தூங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

குழந்தையை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

Also Read:  8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இதனைத்தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் வாயில் பிஸ்கட் பேப்பர் துண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் குழந்தையின் கை, கால் உடம்பில் சிறு சிறு காயங்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் தாயிடமும், பாட்டி நாகலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, நாகலட்சுமி குழந்தையை தாக்கியதையும், கத்திக்கொண்டே இருந்ததால் வாயில் பிளாஸ்டிக் கவரை திணித்து தொட்டிலில் படுக்க வைத்ததை ஒப்புக்கொண்டார்.

குழந்தை துர்கேஷ் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வாயில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், நேற்றும் இதேபோல செய்ததால் கோபமடைந்த நாகலட்சுமி வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதும், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி இறந்தது இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Also Read:  ‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ – சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்

top videos

    இதையடுத்து பாட்டி நாகலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Child murdered, Coimbatore, Crime News, News On Instagram