தண்ணிக்கே தண்ணிக்காட்டும் 7 வயது சிறுமி: யோகாசனத்தில் அசத்துகிறார்!

யோகா சிறுமி

60 அடி ஆழ கிணற்றில்  நீரில் மிதந்தபடி யோகாசனங்கள் செய்து  பழகிய சிறுமி, தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீரில் மிதந்தபடி பத்மாசனம் உட்பட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

  • Share this:
கோவை மாவட்டம் சூலூர் அருகே 7 வயது சிறுமி ஒருவர்   நீரில் மிதந்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக யோகாசனம் செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் பூவராகவன் -  சுகந்தி தம்பதியினர்.இவர்களது 7 வயது மகள் தியாமிகாசாய் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தியாமிகசாய் தனது தாத்தா காளியப்பனின் உதவியுடன் சிறு வயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.மேலும் தந்தை பூவராகவன் மற்றும் தாய் சுகந்தி ஆகியோரின் ஊக்கத்தால் யோகாசனம்  கற்றுக்கொண்ட சிறுமி, அதனை கிணற்றில் நீந்தியபடி செய்து பயிற்சி எடுத்து வருகின்றார்.

இதையும் படிங்க:  இப்படியும் ஒரு ஹை-டெக் ஆட்டோவா? அசத்தும் சென்னை நபர்!


60 அடி ஆழ கிணற்றில்  நீரில் மிதந்தபடி யோகாசனங்கள் செய்து  பழகிய சிறுமி, தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீரில் மிதந்தபடி பத்மாசனம் உட்பட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க: லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!


கிணற்றில் தனது தாத்தா கற்றுக்கொடுத்த நீச்சல் மூலம் யோகாசனங்களை செய்து வருவதாகவும், தற்போது 4 வகையான ஆசனங்களை கிணற்றில் செய்து வருவதாகவும் சிறுமி தியாமிகசாய் தெரிவித்தார். சிறுமியை அக்கிராமத்து மக்களும், உறவினர்களும் ஊக்குவித்து வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: