Home /News /tamil-nadu /

கொடூரத்தின் உச்சம்... மதுபோதையில் 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

கொடூரத்தின் உச்சம்... மதுபோதையில் 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

வீட்டிற்கு மனைவி வந்ததும், அவரிடம் பாதிக்கப்பட்ட மகள் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் தாயார், காவல் நிலையத்திற்கு சென்று கணவர் குறித்து புகார் அளித்துள்ளார்.

    10 வயது மகளை மதுபோதையில் தந்தை ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரது மனைவி இல்லாத நேரத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்டவரை கைது செய்துள்ளனர்.

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த 37 வயதாகும் நபர் ஒருவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த வாரம், வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில், அவர் மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரது 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    வீட்டிற்கு மனைவி வந்ததும், அவரிடம் பாதிக்கப்பட்ட மகள் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் தாயார், காவல் நிலையத்திற்கு சென்று கணவர் குறித்து புகார் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க : வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாயத் தனிமை - அமைச்சர் அறிவிப்பு

    புகாரை விசாரித்த காவல் துறையினர் அவரை, போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 7 (பாலியல் தாக்குதல்), பிரிவு 8 (பாலியல் தாக்குதலுக்கான தண்டனை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

    இதையடுத்து, செவ்வாயன்று அந்த நபர், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பல்லடம் துணை சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 5ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது எதிர்கால நலன் கருதி, அவரது தந்தை, தாய் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    இதையும் படிங்க : மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி ஏதும் இல்லாமல் 100 ஆண்டுகளாக தவிக்கும் பழங்குடியின மக்கள்... ஊரை விட்டும் விரட்டவும் முயற்சி

    குடிபோதையில் ஒரு நபர் எந்த கேவலத்தையும் செய்து விடுவார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி