கோவையில் போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள்: வைரல் வீடியோவால் பரபரப்பு!

போதை ஊசி

கோவை மாநகரில்  போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வந்திருப்பது போலீஸ் விசாரடையில் தெரியவந்தது. வலி நிவாரணத்திற்கான  மாத்திரைகளை வாங்கி அதை டிஸ்டில்டு வாட்டருடன்  கலந்து  போதை ஊசியாக மாற்றி ஊசி போட்டுக்கொள்வதும் போலீஸ் விசரணையில் தெரியவந்தது

  • Share this:
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் போதை ஊசி போட்டு கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகின்றன.

கோவை பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் கடந்த 2 மாதங்களாக அங்கு மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால்,  கோவை பகுதி இளைஞர்கள் போதைக்காக போதை ஊசிக்கு  அடிமையாகி இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த மாதம் மதுக்கரையில் போதை ஊசியினை வாங்கி தரச்சொல்லி மிரட்டிய   ஜீவானந்தம் என்ற போதைக்கு அடிமையான இளைஞர்  கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மணிகண்டன் என்ற இளைஞர் விசாரித்தபோது குனியமுத்தூர் பகுதியில் போதை ஊசி நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதை ஊசி குறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த வாரம் முகமது யாசர், முகமது முஸ்தபா, முகமது முஸ்தபா, முத்து முகமது என்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சமீபகாலமாக கோவை மாநகரில்  போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வந்திருப்பது போலீஸ் விசாரடையில் தெரியவந்தது. வலி நிவாரணத்திற்கான  மாத்திரைகளை வாங்கி அதை "சலைன்" எனப்படும் டிஸ்டில்டு வாட்டருடன்  கலந்து  போதை ஊசியாக மாற்றி ஊசி போட்டுக்கொள்வதும் போலீஸ் விசரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: பிறந்த நாளில் தோனியை புகழ்ந்த பிரபலங்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய கம்பீரின் செயல்!

இந்நிலையில் கோவை புல்லுக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதை ஊசி போட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதில் இளைஞர்கள் இருட்டான பகுதியில் கூட்டமாக அமர்த்து போதை ஊசியை தயாரித்து போதை ஊசி போட்டுக்கொள்வது பதிவாகி இருந்தது. ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதையும் படிங்க: வேகமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு...


மேலும் கோவை மாநகரில் போதை ஊசி நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை மாநகர போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் வெளியான  வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விரைவில் போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்யும்  கும்பலில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Published by:Murugesh M
First published: