Home /News /tamil-nadu /

கோவை திமுக மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

கோவை திமுக மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மீனா ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மீனா ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மீனா ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர்.

    இதனை மேற்கோள்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இதுபோல் வெற்றி பெற்ற திமுகவினரை பதவியில் இருந்து விலகுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அவ்வாறு பதவி விலகாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

    அதன்படி, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க -'சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கான வானிலை எச்சரிக்கை... வெளியே செல்வோர் கவனம் தேவை

    மேலும், உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது, திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார்,

    கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராகவும் மீனா ஜெயக்குமார் முன் நிறுத்தப்படுவார் எனவும் திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம்பெறவில்லை.

    மாநகராட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 57 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைத்து திமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த மீனா ஜெயக்குமார் தலைமை கொடுக்காததால் விரக்தி அடைந்திருந்தார்.

    இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரலாறு காணாத வெற்றியினை திமுக பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் இன்று கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று இருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்கு பொய்யான தகவலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைக்கு கொடுத்ததுதான் காரணம் என குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

    "உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கனும் என்றால் கேட்டுட்டு போ, அதற்காக என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என மேடையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கு எதிராக காட்டமாக பேசினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Coimbatore, DMK, Local Body Election 2022

    அடுத்த செய்தி