திமுகவில் நிறைய பேர் பெரிய பொறுப்பில் இருந்தபடி மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்த்த வேளையில், சாமானியர்களும் மேயர், துணை மேயராக முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையில் மேயர்,துணை மேயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் மாமன்ற கூட்டத்தில் கோவை மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனா பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திமுக அரசின் 9 மாத திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியினை முதல்வர் வழங்கி வருகின்றார் எனவும் கோவை மாவட்டத்தில் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
கோவையின் மேயரை ஒரு மனதாக தேர்வு செய்து இருக்கின்றனர் எனவும், மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனா எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் எனவும், 15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, கல்பனாவின் கணவர் கால்டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து , தற்போது இ சேவை மையம் நடத்தி வருவதாக கூறீனார்.
மேலும் படிக்க: திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி..
கல்பனா வெற்றி பெற்ற பின் பேருந்திலே பயணித்து தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றவர். அவரது குடும்பம் திமுக இயக்கத்திற்கும் , மிசா காலத்திலும் உறுதுணையாக இருந்த குடும்பம் என்பதாலும் மக்கள் இன்ப துன்பங்களை அறிந்த சாமானியர்களை மேயர், துணை மேயராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் எனவும் தெரிவித்தார். இன்று மதியம் வெற்றி செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்யிடுகின்றார் எனவும், வட்ட கழக செயலாளராக இருந்தவர் துணைமேயராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா..
திமுகவில் நிறைய பேர் பெரிய பொறுப்பில் இருந்தபடி மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்த்த வேளையில்,சாமானியர்கள் மேயர்,துணை மேயராக முடியும் என்பதை திமுக தலைமை காட்டியிருக்கின்றது எனவும் தெரிவித்தார். திமுகவில் கவுன்சிலராக தேர்வானவர்கள் மன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும். இயக்கத்தில் மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள் எனவும், தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Mayor, Senthil Balaji