அரசு ஊழியரை காலில் விழவைத்த சம்பவம்: வழக்குப் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அன்னூர் விவகாரம்

கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த கோபிநாத் என்கிற கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 • Share this:
  கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம வி.ஏ.ஒ  அலுவலகத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உதவியாளரை காலில் விழ வைத்த  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக  கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.  அதே  ஊராட்சிக்குட்பட்ட கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்  என்னும் கோபாலசாமி   தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். தடுக்க வந்த முத்துசாமியையும் கோபிநாத் மிரட்டியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால் பயந்துபோன முத்துசாமி, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  தந்தை பெரியார்  திராவிட கழக  பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம உதவியாளர் முத்துசாமிக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய நிவாரன உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: சாதி பாகுபாடு... அச்சுறுத்திய இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம உதவியாளர்.. - கோவையில் அதிர்ச்சி சம்பவம்


  இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.  மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா தலைமையில் குழு அமைத்து விசாரணை நடந்து வருகிறது. மாலைக்கு இரண்டு தரப்பிடமும் விசாரணை செய்து முழு விவரங்கள் பெறப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: மக்களை தேடி மருத்துவம்: நேற்றுவரை பலன் பெற்றவர்கள் எத்தனை பேர்?


  இதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக முத்துச்சாமி மற்றும் கோபிநாத் என்கிற கோபால்சாமி ஆகிய இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.
  Published by:Murugesh M
  First published: