• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: விவசாயியை தாக்கியது அம்பலம்!

கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: விவசாயியை தாக்கியது அம்பலம்!

தாக்குதல் காட்சி

தாக்குதல் காட்சி

இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துச்சாமி வி.ஏ.ஒ அலுவலகத்தில் வைத்து தாக்கி கீழே தள்ளிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Share this:
கோவை மாவட்டம் அன்னூர் விவகாரத்தில் புதியதாக வெளியான வீடியோ அடிப்படையில் வி.ஏ.ஒ மற்றும் கிராம உதவியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்கு  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவர் கோபால்சாமி என்ற விவசாயி காலில் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ஓட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில்  கிராம உதவியாளர் முத்துச்சாமி,  விவசாயி கோபால் சாமியின் காலில் விழும் காட்சிகள் வெளியானது. ஜாதி ரீதியாக கிராம உதவியாளர் முத்துச்சாமியை மிரட்டி காலில் விழ வைத்ததாக தகவல்கள் வெளியானது. விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தனியாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்  தனியாகவும் விசாரணை மேற்கொண்டனர். விவசாயி கோபால்சாமியையும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமியையும்  தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும்,  அதேவேளையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமியின் காலில் விழுந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்


இதனைத்தொடர்ந்து வி.ஏ.ஒ கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும், கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துச்சாமி வி.ஏ.ஒ அலுவலகத்தில் வைத்து தாக்கி கீழே தள்ளிவிடும் காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கு உட்பட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர்  காவல்துறையிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் அவரது உதவியாளர் முத்துச்சாமி  ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விசாரணையின் மீது தவறான தகவல்களை அளித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சூடு பிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒரு இளைஞரை கைது செய்தது சிபிஐ 


இதனையடுத்து இது குறித்து அன்னூர்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வி.ஏ.ஒ அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை செல்போனில் வீடியோ எடுத்து,  தவறான தகவல்களுடன் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில்  பரப்பிய நபர் குறித்தும் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: