• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா பரவல்: கோவையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கொரோனா பரவல்: கோவையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கொரோனா கட்டுப்பாடு

கொரோனா கட்டுப்பாடு

மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படவும்,டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படவும் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. அதில் பால், மருந்து, காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் மட்டுமே காலை 6 மணியிலிருந்து செயல்படவும், பிற கடைகள் அனைத்தும் 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் மளிகை கடைகளையும் அத்தியாவசியமான கடைகள் பட்டியலில் சேர்க்கவும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என மளிகை கடை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரனை வியாபாரிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் படிக்க: ‘சென்னை கமிஷனர் நானு’-பந்தா காட்டிய போலி போலீஸை மடக்கிய நிஜ போலீஸ்!


வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை நடத்திய  பின்னர்  புதிய  கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும்  விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து மளிகை கடைகள் ,பேக்கரிகள், காய்கறி கடைகள், டீ கடைகள்  இனி காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளார்.

மேலும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படவும்,டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படவும் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  கோவையில் உள்ள அனைத்து  மால்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதி இல்லை எனவும் பொள்ளாச்சி மாட்டு சந்தை நாளை முதல் இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில்  தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரான்சில் இருந்து திரும்பிய இருவர் உட்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா!


கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட தடை விதித்தும் , கோவை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: