கோடிக்கணக்கில் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

கோப்புப் படம்

கோவை மாவட்டத்தில்  அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருப்பதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி  கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து  இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும்  லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். திரைப்பட தயாரிப்பாளரான இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவர் இன்று கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்தில்  அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.  மேலும்  மாநகரில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து  இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: டெல்லி சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் - சசிகலா ஆடியோ முக்கிய காரணமா?
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இது தொடர்பாக டி.ஜி.பி உட்பட காவல் துறை  உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாகவும்  ரகுநாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!


அண்மையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துகு மீறி 55 சதவீதம் சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published: