கோவை மாவட்டம் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி கிராம உதவியாளர் முத்துசாமி விவசாயி கோபால்சாமி என்பவரை தாக்கியதும், பின்னர் விவசாயி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள் வெளியானது. முதலில் கிராம உதவியார் விவசாயி காலில் விழும் காட்சிகள் வெளியானது. இதன் அடிப்படையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி புகாரின் பேரில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டம், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் விவசாயி கோபால்சாமியை , கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கும் காட்சிகள் பின்னர் வெளியானது. இது தொடர்பாக விவசாயி கோபால்சாமி கொடுத்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: அதிகாலையில் கைவரிசை காட்டும் கொள்ளையர்கள்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள் - அச்சத்தில் சிவகங்கை மக்கள்
இந்நிலையில் ஆதி தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு சம்பவ இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த உண்மை கண்டறியும் குழுவினர் இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி, விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் இந்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறு.. பெற்ற மகனுக்கு சூடுவைத்து துன்புறுத்திய தாய் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
மேலும் வி.ஏ.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தின் முழு காணொலி காட்சிகளை கைபற்ற வேண்டும் எனவும், அதை பதிவு செய்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை இரு பிரிவினரிடையே மோதலாக மாற்றும் முயற்சி நடைபெறுவதாக தெரிவித்த அவர், எனவே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.. கோபால்சாமி பெயரில் சொந்தமாக இடமே இல்லாத நிலையில் அவர் எப்படி விவசாயி ஆவார் என கேள்வி எழுப்பும் உண்மை கண்டறியும் குழுவினர், இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.