• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை மாவட்ட போலீசாருக்கு ‘குட் நியூஸ்’ கொடுத்த காவல் ஆணையர்!

கோவை மாவட்ட போலீசாருக்கு ‘குட் நியூஸ்’ கொடுத்த காவல் ஆணையர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காவல்துறையினர் நேரம் காலமில்லாமல் வேலை பார்ப்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்படுவதாகவும், வார விடுமுறை அளிப்பதன் மூலம் அவர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மன அழுத்தத்தை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

  • Share this:
கோவை மாநகர  காவல்துறையில் பணிபுரியும்  அதிகாரிகள் மற்றும்  காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க மாநகர  காவல் ஆணையர் தீபக் எம் தாமோர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்திரவு காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை.  உடல் நல குறைவு, அவசர தேவைகளுக்கு மட்டுமே விடுமுறையானது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்கு மண்டல காவல் துறை மற்றும் கோவை மாநகர காவல் துறையில் கடந்த சில மாதங்களாகவே காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் தினத்தன்று விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

புதிதாக கோவை மாநகர ஆணையராக பொறுப்பேற்ற தீபக் எம்.தாமோர் , கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி உயரதிகாரிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு நாள் வார விடுமுறை எடுத்துக் கொள்வதற்கும் அன்றைய தினத்தில் வேறு அதிகாரி கூடுதலாக அந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்றபடி மாதம் தோறும் அட்டவணை தயார் செய்யவும் கோவை மாநகர காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநகர காவல் சிறப்பு  பிரிவுகளிலிருந்தும் உதவி ஆணையர்கள், காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு  வாராந்திர விடுமுறை அளிக்கப்படும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு மாதமும் வார விடுமுறை தொடர்பான அட்டவணை மாநகர காவல் ஆணையர் ஓப்புதலுடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல அந்தந்த காவல் நிலையங்களில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 

மேலும் படிக்க10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்தது..

காவல்துறையினர் நேரம் காலமில்லாமல் வேலை பார்ப்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்படுவதாகவும், வார விடுமுறை அளிப்பதன் மூலம் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியும் என்பதுடன் மன அழுத்தமும் குறையும் என்பதால் இந்த நடவடிக்கையினை கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தமோர் மேற்கொண்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையில் வாரவிடுமுறை திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: