கொரோனா வார்டு அருகில் 3 மணி நேரமாக சேர் போட்டு அமர்ந்து பணிகளை கண்காணித்த கோவை ஆட்சியர்!

சேர் போட்டு அமர்ந்திருக்கும் கோவை ஆட்சியர்

கொரொனா வார்டு முன்பாக சேரை போட்டு அமர்ந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்களின் பணிகளை கண்காணித்தார்.

  • Share this:
கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அருகில் , சேர் போட்டு அமர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று பரவலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,  மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோருடன் கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக், வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆளுக்கு ஒரு புறம் களத்தில் நின்று கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூன் 6) மாலை 5 மணி அளவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன் , அங்கிருந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஆட்சியர் நாகராஜன்


இதனைத் தொடர்ந்து கொரொனா வார்டு முன்பாக சேரை போட்டு அமர்ந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்களின் பணிகளை கண்காணித்தார். அரசு மருத்துவமனை வளாகத்தில் சேரில் அமர்ந்திருந்த படி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளையும், அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் கையாளும் விதத்தையும் நேரடியாக பார்வையிட்டார்.

ஞாயிற்று கிழமை என்பதால் மருத்துவமனையில் உயர் மருத்துவ அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் சாதாரணமாக அமர்ந்து மருத்துவமனை பணிகளை பார்வையிட்டதுடன் , ஊழியர்களிடமும் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 மணி நேரமாக அமர்ந்து இருந்த நிலையில் , மருத்துவமனை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது....

கோவை மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.  ஓரே நாளில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read:    சென்னையில் ஊரடங்கை மீறி மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள்; போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம்!

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 40 ஆயிரமாக இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து இன்று 31539 ஆக இருக்கின்றது. அதே வேளையில் நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆளுக்கு ஒரு புறமாக களத்தில் பணியாற்றி வருவது பொது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: