• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரளாவில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் வந்து செல்ல அனுமதி இல்லை!

கேரளாவில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் வந்து செல்ல அனுமதி இல்லை!

coimbatore

coimbatore

கோவை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு 

  • Share this:
கேரளாவிலிருந்து தினமும் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் தினசரி வந்து செல்ல அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார். மேலும் நகைக் கடைகள், துணிக்கடைகள், பூங்காக்கள், மால்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய  கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர்  1ம் தேதி  முதல் நடைமுறை படுத்தப்பட இருக்கின்றது.

கோவை நகரில்  கிராஸ்கட் சாலை , 100 அடி சாலை , ஒப்பணக்கார வீதி , ராமமூர்த்தி சாலை , சாரமேடு சாலை,ரைஸ் மில் சாலை , என்.பி.இட்டேரி சாலை , சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை ( திருச்சி ரோடு ) , ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி ரோடு ( நேரு நகர் ) , டி.பி.ரோடு , திருவேங்கடசாமி ரோடு , என்.எஸ்.ஆர்.ரோடு , ஆரோக்கிய சாமி ரோடு , சரவணம்பட்டி சந்திப்பு , கணபதி பேருந்து நிலைய சந்திப்பு , துடியலூர் சந்திப்பு மார்கெட் கடைகள் , பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள் , காந்திமாநகர் சந்திப்பு , ஆவாரம்பாளையம் சந்திப்பு , கணபதி பாரதி நகர் , பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு , ராஜ வீதி , பெரிய கடை வீதி , வெரைட்டி ஹால் வீதி , என்.எச.ரோடு , இடையர் வீதி , வைசியாள் வீதி , தாமஸ் வீதி , சுக்கிரவாரபேட்டை வீதி , மரக்கடை வீதி , ரங்கே கவுண்டர் வீதி , காந்திபுரம் முதல் வீதி முதல் 11 வது வீதி வரை உள்ள  தெருக்கள் , மற்றும் சல்லிவன் வீதி ஆகிய 44 பகுதிகளில் உள்ள தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அந்த தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால் , மருந்தகம் , காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் சனி ,  ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்


மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் மால்கள் ஆகியவை சனி, ஞாயிறு அகிய இரு தினங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் – சிக்கிய 50 வீடியோக்கள்!

கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை  உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகம் மற்றும் பேக்கரிகள்  காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும்,  மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரள மாநிலத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவியர்கள் தினசரி வந்து  செல்ல அனுமதியில்லை  எனவும், தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக  பரவி வரும்  நிலையில்,  அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ , மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் , RTPCR பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள்  உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கொரொனா கட்டுப்பாடு விதிமுறைகளை  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: