கோவைராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்தி சென்றனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வாயிலில் புனித செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து தேவாலயத்தின் காவலாளி ஜான்சன் என்பவர் இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராமநாதபுரம் காவல்துறையினர் அருகில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிலை சேதப்படுத்தபட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிலை சேதப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்தும், யார் சேதப்படுத்தினர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.