கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதக்ஷா சன்ஸ்ரே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் பிரதீஷ் சுகன்யா தம்பதி. இவர்களது மகன் லக்ஷ்ன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமை நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். பூங்காவில் மின் விளக்குகள் பதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் மின் ஓயரை வெளியே எடுத்துவிட்டு அதனை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்.
மாலை வேளையில் பூங்காவுக்கு வந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரின்மீது விழுந்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
லஷ்மன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுவனின் உடலைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் அலட்சியமாக நடந்து கொண்ட குடியிருப்பு அசோசியேஷன் பூங்கா பராமரிப்பாளர், எலெக்ட்ரீஷியன் ஆகியோர் மீது புகார் அளித்தனர்.
ஆபாச வீடியோக்களை அனுப்புகின்றனர்: கடும் நடவடிக்கை வேண்டும் - நடிகர் நகுலின் மனைவி வேதனை
அசோசியேஷன் தலையீடு காரணமாக வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து சிறுவனின் தாயார் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து வடவள்ளி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல்கட்ட விசாரணையில் பூங்கா ஊழியர்கள் மின்சார ஒயரை அலட்சியமாக விட்டுச்சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட தோட்டக்காரர் மற்றும் எலட்ரிசியன் மீது வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர்பறிபோன சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.