Home /News /tamil-nadu /

பள்ளியில் மதமாற்றம்: அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக தலையிடும்.. அண்ணாமலை

பள்ளியில் மதமாற்றம்: அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக தலையிடும்.. அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Religious conversion/ மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கின்றார்.  கண்ணாட்டுவிளை விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை எதற்கு பள்ளி அறைக்கு கொண்டு வருகின்றார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக தலையிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தனியார் கல்லூரியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் பேசுபொருளாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

    இன்று கண்ணாட்டுவிளையில் மாணவி கொடுத்துள்ள புகார் மற்றொரு சான்று. மகாத்மா காந்தியே
    மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கின்றார்.  கண்ணாட்டுவிளை விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை எதற்கு பள்ளி அறைக்கு கொண்டு வருகின்றார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டும். கட்டாய மதமாற்றம் செய்யகூடாது. காது கேளாத அரசுக்கு இது எப்படி கேட்கும் என்று விமர்சித்த அண்ணாமலை, கன்னியாகுமரி  விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதில் பா.ஜ.க தலையிடும் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், 40 ஆண்டுகளில் மதத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு பதிலை பொறுத்து பா.ஜ.க நடவடிக்கை இருக்கும் என குறிப்பிட்டார்.  இந்தி விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துடன் முரண்பாடு எதுவும் இல்லை என்று விளக்கமளித்த அண்ணாமலை, “ இந்தி எங்கேயும் திணிக்க பட வில்லை. இந்தி பேசுபவர்களின் சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் அமித்ஷா சொல்லி இருக்கின்றார்.

    இதையும் படிங்க: இந்து கடவுள்கள் குறித்து அவதூறு.. அரசு பள்ளியில் மதமாற்றம்: ஆசிரியை பற்றி போலீஸில் மாணவி புகார்


    20 ஆண்டுகாலம் இலக்கு வைத்து செயல்பட்டால்
    இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்துவிடலாம். ஏ.ஆர்.ரகுமான் ஆசைதான் எங்களின் ஆசையும். இங்கு தமிழை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி ,தமிழை பயிற்று மொழியாக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய முன் வந்தால் பா.ஜ.க உடன் இருக்கும்.

    மேலும் படிக்க: உணவகத்திற்குள் புகுந்த கார்... பதபதைக்க வைக்கும் வீடியோ


    தமிழ் மெல்ல செத்து கொண்டு இருக்கின்றது. 5 முறை திமுக ஆட்சியில் என்ன செய்து உள்ளது. சர்வதேச அளவில் தமிழை வளர்க்க கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும்.
    தமிழை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் எங்கள் கருத்தை சொல்லுவோம். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் நம்பர்ஓன். குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP, Kanniyakumari, Religious conversion

    அடுத்த செய்தி