• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’காலையில் மிஸ்டுகால்.. மாலையில் பாஜக உறுப்பினர் அட்டை’- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை சர்ச்சை

’காலையில் மிஸ்டுகால்.. மாலையில் பாஜக உறுப்பினர் அட்டை’- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை சர்ச்சை

பாஜகவினர் அடையாள அட்டை கொடுக்கும் புகைப்படம்

பாஜகவினர் அடையாள அட்டை கொடுக்கும் புகைப்படம்

ஓய்வு பெற்றவுடன் பதிவாளர் முருகன்  துணைவேந்தர் அறையிலேயே பா.ஜ.க வில் இணைந்ததால் சர்ச்சை.

  • Share this:
கோவை பாரதியார் பல்கலைகழக பதிவாளர் முருகன் பணி ஓய்வு பெற்றவுடன் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் அறையிலேயே பா.ஜ.கவில் இணைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும்,   விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர் முருகன். இவர் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்றதற்கு மறுநாள் பல்கலைகழகத்திற்கு தனது  பொருட்களை எடுக்க வந்த அவர், பா.ஜ.க வில் உறுப்பினராக மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணைந்தார். துணைவேந்தர் அறையின் அருகில் விருந்தினர்கள் காத்திருக்கும் அறையில் வைத்து அன்றைய தினமே, பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் பா.ஜ.கவில்  முருகன்  இணைந்தற்கான அடையாள அட்டையினை வழங்கினர்.

ஓய்வு பெற்ற பாரதியார் பல்கலை பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை தனது முகநூல் பக்கத்தில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி வெளியிட்டு இருந்தார். பல்கலைகழக வளாகத்தில் உள்ள அறையில் ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமியிடம் கேட்ட போது, பல்கலை கழகத்தில் வேறு ஒருவரை பார்ப்பதற்காக சென்ற போது ,  பதிவாளர் முருகனை  பார்த்தாகவும், அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பதால் அவருக்கு கட்சியின்  அடையாள அட்டையை கொடுத்தோம் எனவும், அது இப்போது  சர்ச்சையாகி விட்டது என தெரிவித்தார்.

இது எதுவும்  பிளான் பண்ணி நடக்கவில்லை என தெரிவித்த அவர், அவரும் யோசிக்காமல் பா.ஜ.கவில் உறுப்பினராக கால் பண்ணியவுடன் அவருக்கு உறுப்பினர் எண் வந்து விட்டது, அதை வைத்து நாங்கள் அவருக்கு அடையாள அட்டையை கொடுத்து விட்டோம் என தெரிவித்தார்.இப்போது அவர் பல்கலை கழகத்தில்  பணி நீடிப்பு கேட்டு தொடர்ந்து பணியாற்ற இருப்பதாகவும்,  கட்சி சார்ந்து இருக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டதாகவும் கட்சியில்  நீடிக்க விரும்ப வில்லை என்று முருகன்  கூறி விட்டதால்  அவருக்கு கொடுத்த அடையாள அட்டையினை திரும்ப வாங்கி விட்டதாகவும் பா.ஜ.க இளைரணி மாநில செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தெரிவித்தார்.

அடையாள அட்டை வாங்கியதால் அவர் கேரியரே போகுது என்பதால் மீண்டும் கார்டை திருப்பி கொடுத்து விட்டார் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பதிவாளர் முருகனை தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்க வில்லை. பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பாரதியார் பல்கலைகழக ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன், கட்சியில் சேர்ந்து 3 நாட்களிலேயே வெளயேறியிருப்பது குறிப்பிடதக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: