Home /News /tamil-nadu /

இமயமலையில் ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்.!

இமயமலையில் ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்.!

யதீந்திரா

யதீந்திரா

ஆட்டிசம் குறைபாட்டை புறந்தள்ளி உயரம் தொட்டு சாதித்து காட்டி இருக்கிறார் கோவையை சேர்ந்த சிறுவன் யதீந்திரா. 12 வயதில் இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரம் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

    கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, விஜய கஸ்தூரி தம்பதியின் மகன் யதீந்திரா. இவர் ஆட்டிசம் எனும் மதிஇறுக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சி,கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்து வந்தனர் யதீந்திராவின் பெற்றோர். மேலும் மலையேறும் பயிற்சி மையத்தில் இணைந்து மலை ஏறும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

    இமயமலை ஏறி சாதனை

    பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் தன்முனைப்பாலும் தற்போது சாதித்தும் காட்டி இருக்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் இமய மலைத்தொடரில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பியாஸ் குண்ட் மலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யதீந்திரா, 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தினார்‌. இந்தியாவில் இந்த சாதனையை படைத்துள்ள முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவனும் இவரே.

    இமயமலை ஏறி சாதனை படைத்துவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த யதீந்திராவுக்கு அவரது உறவினர் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யதீந்திராவின் தாய் விஜய கஸ்தூரி, ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் அனைவரும் சாதனைகள் படைக்க வேண்டும் அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் குறைபாடு உள்ள குழந்தைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் அவர் தெரிவித்துள்ளார்.

    யதீந்திரா


    Must Read :  துப்புரவு தொழிலாளியாக மாறிய நீயா நானா கோபிநாத்... பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடே ஆட்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இது நோய் அல்ல. குறைபாடு மட்டுமே. சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதலாக இரண்டு அல்லது மூன்று முறை சொல்லிக்கொடுத்தால் அவர்களும் திறமைசாலிகளே. இதற்கு எடுத்துக்காட்டே யதீந்திரா.

    செய்தியாளர் - ஜெரால்ட், கோவை
    Published by:Suresh V
    First published:

    Tags: Boy, Coimbatore, Record

    அடுத்த செய்தி