கோவை மாவட்டம் அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி அலுவலக பெண் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குணவதி. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான குணவதியின் தாயார் சமீபத்தில் காலமானார். தாய் உயிரிழந்த நிலையில் வளைகாப்பு நிகழ்வு நடக்குமா என தெரியாமல் மனச்சோர்வுடன் இருந்துள்ளார்.
குனவதியின் அவரது மனசோர்வை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் ஒருங்கிணைந்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தினர். நேற்று மாலை இந்த வளைகாப்பு நிகழ்வை அலுவலகம் முடிந்த பின்னர் அலுவலக வளாகத்திலேயே சக ஊழியர்கள் நடத்தினர்.அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், கர்பிணி ஊழியர் குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் அணிவித்து, பொட்டு ,பூ வைத்து ஆரத்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நிகழ்வை நடத்தினர்.
Also Read: தன்னம்பிக்கை எதிரொலிக்கும் நரிக்குறவ இன மாணவியின் பேச்சு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதனால் மனம் மகிழ்ந்து போன குணவதி , தன்னுடன் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். கர்பிணியான பெண் அருவலருக்கு சக அலுவலர்கள் சேர்ந்த வளைகாப்பு நடத்திய நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Religion functions, Tamil News