Home /News /tamil-nadu /

இலங்கை தாதா அங்கொட லொக்கா உடன் விடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினருக்கு தொடர்பு

இலங்கை தாதா அங்கொட லொக்கா உடன் விடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினருக்கு தொடர்பு

அங்கொட லொக்கா

அங்கொட லொக்கா

இலங்கை நிழல் உலக தாதா அங்கொடலொக்கா தொடர்பான வழக்குசிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்கள் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளர்  சபேசன் உள்ளிட்டோருக்கும்  இலங்கை நிழல  உலகதாதா  அங்கொட லொக்காவுக்கும் இடையே  தொடர்பு இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தில் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தனது காதலி அமானி தாஞ்சியுடன்  தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலை போலி ஆவணங்கள் மூலம் மதுரை எடுத்து செல்லப்பட்டு  எரியூட்டப்பட்டது. இது தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த அங்கொட லொக்காவின்  கைத்துப்பாக்கி மாயமாகி  இருப்பதை அறிந்த சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாகவும்  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.   அங்கொடலொக்காவின்  நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தபோது  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பொழுது அங்கொட லொக்காவிற்கும்,சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
முன்னாள் விடுதலை புலி நிர்வாகி சபேசன் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த  சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்  ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஜனவரி 25 வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது - நீதிமன்றம்


இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் நீதிமன்றம் மூலம் சிறையில் இருந்த  சபேசன் உட்பட 3 பேரையும் கொச்சி சிறையில் இருந்து 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து வெளியேறி அங்கொட லொக்கா, சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன்,சின்னசுரேஷ், ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை ரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

மேலும் படிங்க: ரவுடி படப்பை குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என கோரி தொடரப்பட்ட மனு தள்ளுபடி


இதனிடையே அங்கொட லொக்காவின் மாயமான கைத்துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் , இந்த வழக்கில் கைதான வழகறிஞர் சிவகாமசுந்தரி அந்த கைத்துப்பாக்கியை மதுரை - சிவகங்கை சாலையில் குளத்தின் கரையில் புதைத்து வைத்திருப்பதை அறிந்தனர். இதனையடுத்து அந்த கைத்துப்பாக்கியும் சிபிசிஐடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
Published by:Murugesh M
First published:

Tags: Coimbatore, LTTE, Srilanka

அடுத்த செய்தி